fbpx
Homeபிற செய்திகள்ஆசிய சிலம்பப் போட்டியில் 21 தங்கம் உள்பட 41 பதக்கம் வென்று கோவை மாணவ மாணவிகள்...

ஆசிய சிலம்பப் போட்டியில் 21 தங்கம் உள்பட 41 பதக்கம் வென்று கோவை மாணவ மாணவிகள் சாதனை

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் 5வது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் 2023- &2024 போட்டி நாகர்கோவிலில் டிசம்பர் 26 முதல் 29 வரை நடைபெற்றது. குத்துவரிசை, அலங்கார வீச்சு, ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வேல்கம்பு வீச்சு, ஒற்றை சுருள் வாள், இரட்டை சுருள் வாள், ஆயுத ஜோடி, நேரடி சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபால் ஆகிய நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாணவரும் ஏதேனும் மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டனர். இப்போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார். இந்திய அணி சார்பாக கோவை சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போட்ஸ் அகாடமி மாணவ மாணவியர்கள் 16 பேர் கலந்து கொண்டு 21 தங்கம், 10 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் வென்றனர். இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. சிங்கப்பூர் இரண்டாம் இடமும் ஸ்ரீ லங்கா மூன்றாம் இடத்தை பிடித்தது.

வெற்றி கோப்பையினை உலக சிலம்ப சம்மேளனம் நிறுவனர் பேராசான் செல்வராஜ் வழங்கினார். மினி சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் சஞ்ஜித் 3 தங்கம், சச்சின் ஆலிவர் 3 தங்கம், சப் ஜுனியர் பெண்கள் பிரிவில் நேத்ரா ஸ்ரீ 2 தங்கம், 1 வெள்ளி, ஜாக்குலின் நேத்ரா 2 வெள்ளி, ஸ்வர்ணிகா 2 வெள்ளி, சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் ஹரிதிக்கிஷன் 3 தங்கம், தருண் 2 தங்கம், 1 வெண்கலம், நௌனீத் 1 தங்கம், 1 வெண்கலம், ராகுல் 2 தங்கம், 1 வெண்கலம், ரூபேஸ் 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம், ஜூனியர் பெண்கள் பிரிவில் அக்க்ஷதா 2 தங்கம், 1 வெள்ளி, நிதர்சனா 1 தங்கம், 2 வெள்ளி, ஜெஸ்லின் 2 வெள்ளி, 1 வெண்கலம், ஆண்கள் பிரிவில் மித்ரேஷ்ராம் 1 தங்கம், 1 வெண்கலம், நிகிலேஷ் 1 வெண்கலம், சர்வேக்ஷ் 1 வெண்கலம் வென்றனர்.

மொத்தம் 21 தங்கம்,10 வெள்ளி 10 வெண்கலம் என 41 பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்க செயலாளர் சுதாகர், தலைவர் சிலம்பலாயா தலைமை ஆசிரியர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண்பாண்டியன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img