கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வலது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். ஒவ்வொரு வருடமும் வலி அதிகமாகிக் கொண்டே இருந்தது. குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவர் தன் வலியைப் பொறுத்துக் கொண்டு, மருத்துவ உதவி எதுவும் பெறாமல் தவிர்த்து வந்துள்ளார்.
தற்போது அவரால் எழுந்து நிற்க முடியாமல், அவருடைய அன்றாட வேலையைச் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனைக்கு வந்தார்.
அவரைப் பரிசோதித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் அவரது மூட்டைச் சுற்றி சரளைக் கற்களைப் போன்ற 100க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் சிதறிக்கிடப்பது கண்டறியப்பட்டது.
எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இது ஒரு வகையான கட்டியினால் அவரு டைய முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்புகள் அரித்து சரளைக் கற்கள் போல உதிர்ந்து கொண்டிருந்தன என்று கண்டறியப்பட்டது.
அவருக்கு ரோபோடிக் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டது. அதிநவீன 100 சதவீத ஆட்டோமேடிக் ரோபோடிக் சிஸ்டம் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட உதிரியான சரளைக்கற்கள் போன்ற எலும்புத் துகள்கள் முழு வதும் அகற்றப்பட்டன. அதன் பின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.ரெக்ஸ், கூறியதாவது: நான் இந்த மாதிரி ஒரு முழங்காலில் நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புத் துகள்களைப் பார்த்ததில்லை. அவை அதிகபட்சம் 4 செ.மீ. அளவிலிருந்து பல அளவுகளில் காணப்பட்டன.
தற்போதைய அதி நவீன எம்.ஆர்.ஐ., சிடி மற்றும் ரோபோடிக் சிஸ்டத்தின் உதவியால் அவை கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு விட்டன. உடைந்த எலும்புகள் சரி செய்யப்பட்டன. குருத்தெலும்பும் செயற்கை இம்ப்ளாண்ட் வைத்து துல்லியமாக சரிசெய்யப்பட்டது. இவ்வாறு டாக்டர் சி.ரெக்ஸ் தெரிவித்தார்.
சிகிச்சை பெற்று குணமடைந்த கிருஷ்ணகிரி மூதாட்டி கூறுகையில், தற்போது வலியின்றி அன்றாட வேலைகளைச் செய்ய முடிகிறது. இதை தன்னால் நம்ப முடியவில்லை
என்றார்.
கோவை ரெக்ஸ் ஆர்த்தோ ஹாஸ்பிட்டல், ரோபோடிக் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையில் தலைசிறந்த சிறப்பு மையமாக செயல்பட்டு வருகிறது. அனைத்துவிதமான அதிநவீன தொழில் நுட்பங்களும் இங்க பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.