fbpx
Homeபிற செய்திகள்கோவை பார்க் பொறியியல் கல்லூரிகளின் கலை திருவிழா பல்வேறு போட்டிகளுடன் கோலாகலம்

கோவை பார்க் பொறியியல் கல்லூரிகளின் கலை திருவிழா பல்வேறு போட்டிகளுடன் கோலாகலம்

கோவை கணியூரில் அமைந்துள்ள பார்க் கல்விக் குழுமத்தின் பொறி யியல் கல்லூரிகளான பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுற்பக் கல்லூரி, பார்க் தொழில்நுட்ப கல்லூரிகளின் இரண்டு நாள் கலை திருவிழாவான, ஆண்டு விழா 2025- ZERO G விமர்சையாக நடைபெற்றது.
இந்த கலைவிழாவில் 21 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பல போட்டிகளில் பங்கெடுத்தனர். ப்ரொஜெட், ஷார்ட் பிலிம், ஓவியம், இ ஸ்போர்ட்ஸ், புகைப்படம், பாடல், மீம்ஸ், ரீல்ஸ் மேக்கிங் போன்ற 30க்கும் மேலான போட்டிகள் நடைபெற்றன.
முதல் நாள், திரைப் படத்துறையில் சாதித்து வரும் பின்னணி பாடகர்கள் ஆர்.கே.ஆதித்யா மற் றும் எஸ்.ரேஷ்மா கலந்து கொண்டு தங்க ளது குரல் வளத்தால் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள்.

இரண்டாம் நாள் நிறைவு விழாவுக்கு பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கமாண்டர் ஆர்.பி.அரவிந் தன் (ஓய்வு), இந்திய கடற்படை மற்றும் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் கௌரவ விருந்தினராகவும், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

டாக்டர் அனுஷா ரவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ZERO G குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகளாக ராணுவம் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கி வரும் கல்வி கட்டண சலுகையை மீண்டும் அறிவிக்குமாறு கமாண்டர் அரவிந்தனை கேட்டுக் கொண்டு வெளியிட்டார். கமாண்டர் ஆர்.பி.அரவிந்தன் (ஓய்வு) பேசுகையில், தற்போது உள்ள போர் சூழ்நிலையில் ராணுவ வீரர்களின் நிலைமைகளை விளக்கினார், மேலும் அவர் கள் தான் உண்மையான ஹீரோக்கள் அவர்களை மதிக்குமாறும், எல்லையில் நமது நாட்டைக் காத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும் நலமுடன் திரும்பி வரவும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிரியா வாரியாருடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வு உற்சாகமாகவும் சுவையானதாகவும் அமைந்திருந்தது. இந்தக் கல்வி ஆண்டில் சிறந்து விளங்கிய பேராசி ரியர்களுக்கு விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்த கலை விழாவின் போட்டிகளில் கலந்து கொண்டு வென்ற மாணவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img