fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனை: காவசாகி நோயிலிருந்து மீண்ட 2 குழந்தைகள்

கோவை அரசு மருத்துவமனை: காவசாகி நோயிலிருந்து மீண்ட 2 குழந்தைகள்

கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காய்ச்சலால் அனுமதிக் கப்பட்டனர். தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப் பட்டன. அதில் குழந்தைகளுக்கு காவசாகி என்ற அரியவை நோய் கண்டறியப்பட்டது.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், கை கால் வீக்கம், தோல் உரிவது, நெரி கட்டுவது போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்க கூடிய இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில் மாரடைப்பு மற்றும் இருதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அளிக்கப்படும் எதிர்ப்பு சக்தி மருந்து ஒரு லட்சம் ரூபாய் ஆகும்.

இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இம்யுனோ குளோபுலின் என்ற மருந்து செலுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து குழந்தைகள் நோயில் இருந்து மீண்டு நல்ல உடல் நலத்துடன் குழந்தை வீடு திரும்பினர்.

கடந்த ஒரு வார காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு 1 லட்சம் மதிப்பிலான மருந்துகள் செலுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளுக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்து செலுத்தப்பட்டு, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img