fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட பெண்கள் முன்னேற உதவும் 'வாழ்ந்து காட்டுவோம் திட்டம்' 225 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.07...

கோவை மாவட்ட பெண்கள் முன்னேற உதவும் ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டம்’ 225 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.07 கோடி மானியத்துடன் ரூ.9.30 கோடி கடன் உதவி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் மூலமாக இணை மானிய திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்தனர்.
நகர்ப்புறங்களில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மகளிர்களை கொண்டு சுய உதவிக்குழுக்களை அமைத்து அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, தனிநபர் கடன், குழுக்கடன் மற்றும் வங்கிக்கடன், குழுக்களை இணைத்தல் மூலமாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மகளிர்களுக்கான கிராம வறுமை ஒழிப்புசங்கம் அமைத்தல், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு ஏற்படுத்துதல் புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்பு ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கான தனிநபர் கடன் வழங்குதல், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், சுயவேலைவாய்ப்புத் திட்டம், திறன் வளர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல் போன்ற பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலமாக காரமடை வட்டாரம் நெல்லித்துறை ஊராட்சியில் 16 குக்கிராமங்களில் 20 பழங்குடியினர் மகளிர் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 20 குழுவில் 8 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
TNSRLM, மகளிர் திட்டத்தின் மூலமாக ஒரு குழுவுக்கு ஆதார நிதி ரூ.15000/- வீதம் 8 குழுக்களுக்கு ரூ.1,20,000/- வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 20 குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் தனி நபராக தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்க்காக நெல்லித்துறை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.50,000/- முதல் ரூ.1,50,000/- வரை தொழிலுக்காக வழங்கி வருகின்றனர்.
மேலும், குழுக்களுக்கு இந்தியன் வங்கி தாயனுர் கிளையிலும், கனரா வங்கி மேட்டுப்பாளையம் கிளையிலும், 20 குழுக்களுக்கு ரூ.1.14 கோடி வங்கி கடன் பெற்று தரப்பட்டுள்ளது. வங்கி கடன் பெற்ற குழுக்களுக்கு வட்டி மானியமும் மகளிர் திட்டத்தின் மூலமாக வழங்கி வருகின்றனர். மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக இணைமானிய திட்டத்தின் மூலம் கடன் வழங்கி அரவை இயந்திரம், குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் கிடைக்க கூடிய இயற்கை பொருட்களை எடுத்து சிறிய அளவில் தொழில் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் மகளிர் திட்டம் சார்பில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் இணைய மானிய திட்டத்தின் கீழ் 225 குழுக்களுக்கு ரூ.9.30 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3.07 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் மூலமாக மதி சந்தைகள் மற்றும் கல்லூரி சந்தைகளில் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக மகளிர் திட்டத்தின் மூலம் 12 மகளிர் குழுக்களில் உள்ள உறுப்பினர்களை கொண்டு மரமில்லா வனப்பொருட்கள் தொகுப்பு துவங்கப்பட்டது.

அத்தொகுப்பில் மலைப்பகுதிகளில் கிடைக்க கூடிய இயற்கை பொருட்களான கடுக்காய், ஜாதிக்காய், ஆவாரம் பூ, அரப்பு, சீயக்காய், நெல்லிக்காய், வேங்கை பொட்டு, போன்றவைகளை பெற்று அதனை மதிப்பு கூட்டும் பொருட்களாக செய்வதற்கு இத்தொகுப்பில் மூல பொருட்கள் பெறுவதற்கும் இயந்திரங்களுக்கு ரூ.10 இலட்சம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் மூலம் கடனாக 6 சதவீதம் வட்டியில் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், காரமடை வட்டாரம், நெல்லித்துறை ஊராட்சியில், கீழ்பில்லூர் குக்கிராமத்தை சேர்ந்த சுதா நிறைந்த மனதுடன் தெரிவித்ததாவது: –


காரமடை வட்டாரம், நெல்லித்துறை ஊராட்சியில், கீழ்பில்லூர் குக்கிராமத்தை சேர்ந்த நான் வெண்ணிலா மகளிர் சுய உதவிக்குழுவில் 5 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். நான் மகளிர் திட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (ஸிsமீtவீ) மூலமாக 10 நாட்கள் மசாலா பொடி தயாரிக்கும் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
அதன் பின்பு சிறிய அளவில் அருகில் உள்ள குக்கிராமங்களுக்கு மட்டும் அரைத்து விற்பனை செய்து வந்தேன். மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக இணைமானிய திட்டத்தில் ரூபாய் 2,85,000/- வங்கி மூலமாக பெற்று, இயற்கை பொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக செய்து விற்பனை செய்து வருகிறேன்.

மேலும் தொழிலை மேம்படுத்த, மரமில்லா வன பொருட்கள் தொகுப்பில் இணைத்து பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறோம். தற்போது எங்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டுள்ளது. இந்த திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மகளிர் குழு சார்பாக நன்றியை நிறைந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
கோவை மாவட்டம், காரமடை வட்டாரம், நெல்லித்துறை ஊராட்சியில், கீழ்பில்லூர் குக்கிராமத்தை சேர்ந்த சிவகாமி நிறைந்த மனதுடன் தெரிவித்ததாவது: –

காரமடை வட்டாரம், நெல்லித்துறை ஊராட்சியில், கீழ்பில்லூர் குக்கிராமத்தை சேர்ந்த நான், வெண்ணிலா மகளிர் சுய உதவுக்குழுவில் 5 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மகளிர் திட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (ஸிsமீtவீ) மூலமாக 10 நாட்கள் மசாலா பொடி தயாரிக்கும் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன் பின்பு சிறிய அளவில் அருகில் உள்ள குக்கிராமங்களுக்கு மட்டும் அரைத்து விற்பனை செய்து வந்தேன். பின்பு அருகில் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தக்கூடிய பள்ளிகளுக்கும் சமைப்பதற்கான மாசலாப் பொருட்கள் செய்து கொடுத்து வந்தேன்.

மேலும் மகளிர் திட்டத்தின் மூலமாக மரமில்லா வன பொருட்கள் தொகுப்பில் இணைந்து மலைகளில் கிடைக்கக்கூடிய இயற்கை பொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக செய்து விற்பனை செய்து வருகிறேன். மேலும் தொழிலை மேம்படுத்தவும், சந்தைப்படுத்துதலுக்கும் உதவியாக இருக்கின்றது. தற்போது எங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மகளிர்கள் பயன்பெறும் வகையில், இதுபோன்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மகளிர் குழு சார்பாக நன்றியை நிறைந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img