கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட இராம செட்டிபாளையம் பகுதியில் செங்குளத்திற்கு நீர் வரக்கூடிய வாய்க்கால் தூர்வாரும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் ஆகியோர் உள்ளனர்.