fbpx
Homeபிற செய்திகள்20 குஜராத் விவசாயிகளுக்கு தென்னைசாகுபடி உயர் தொழில்நுட்ப பயிற்சி

20 குஜராத் விவசாயிகளுக்கு தென்னைசாகுபடி உயர் தொழில்நுட்ப பயிற்சி

தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் வாரியத்தின் மாநில மையம், குஜராத் சார்பில் மூன்று நாள் தமிழ்நாடு மாநிலம் கண்டுணர் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி குஜராத் மாநிலத்திலிருந்து வந்த 20 விவசாயிகளுக்கு உடுமலை அருகே தளியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் மகத்துவ மையத்தில் தென்னை சாகுபடி உயர்தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.

தென்னை வளர்ச்சி வாரியத்தின் உதவி இயக்குனர் ரகோத்துமன், தளி மகத்துவ மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் பல்வேறு திட்டங்களாகிய பரப்பு விரிவாக்க திட்டம், தாய்நெற்று விதை தோட்டம் மற்றும் தென்னை நாற்றங்கால் அமைத்தல், மாதிரி செயல் விளக்க பண்ணை, அங்கக உரக்கூடம் அமைத்தல், மறுநடவு மற்றும் புத்துயிர் ஊட்டல், தென்னைக்கான மற்றும் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டங்கள், தென்னை தொழில்நுட்ப இயக்கத்தின் மூலமாக தென்னை சார்ந்த தொழில்முனை வோருக்கான திட்டங்கள் குறித்து தெளிவாக விளக்கி கூறினார்.

மேலும், சர்வதேச, இந்திய மற்றும் தமிழ்நாடு அளவில் தென்னை பயிரின் இன்றைய நிலை, தென்னையில் ரகங்கள் மற்றும் தேர்வு, தென்னை பயிருக்கேற்ற மண் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகள், உயர்விளைச்சல் தென்னை ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுக்கள், தென்னை சாகுபடியில் உழவியல் தொழில்நுட்பங்கள், தாய்மர தேர்வு, விதைக் காய்கள் தேர்வு, நாற்றங் கால் மேலாண்மை, இளந்தென்னங்கன்றுகள் பராமரித்தல், தென்னையில் ஊடுபயிர்கள், பல அடுக்கு பயிர்கள், கலப்பு பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் துல்லிய பண்ணையம் அமைத்தல், தென் னந்தோப்பில் பசுந்தாள் உரப்பயிர் வளர்ப்பு, தீவன பயிர் சாகுபடி, ஒருங் கிணைந்த பூச்சி, நோய், உரம், நீர் மற்றும் சத்து குறைபாடு மேலாண்மை, கலப்பின ரகம் தயாரித்தல், அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

அனைத்து தென்னை உயர்சாகுபடி தொழில் நுட்பங்களும் செயல் முறை விளக்கம் செய்தும் காண்பிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தென்னை உயிர்உரங்கள், ஒட்டுண் ணிகள், இரை விழுங்கிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி கொல்லிகள், விளக்குப் பொறி, இனக் கவர்ச்சிப் பொறி கண்காட்சியில் வைக்கப்பட்டு விளக்கி கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குஜராத் மாநில அதிகாரிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img