fbpx
Homeபிற செய்திகள்கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் ஜிஎஸ்டி வரி கருத்தரங்கம்

கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் ஜிஎஸ்டி வரி கருத்தரங்கம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பாக ஆவாரம் பாளையத்தில் உள்ள கோ இந்தியா ஹாலில் ஜிஎஸ்டி வரி செலுத்துவது,
ஜிஎஸ்டி எடுப்பது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங் கிற்கு கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.ராஜதுரை தலைமை தாங்கினார். இந்த விழாவிற்கு சங்க செய லாளர் தாமோதரன் சாமி, பொருளாளர் சோமசுந்தரம், துணைத் தலைவர் மரியா ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சார்ட் டெட் அக்கவுண் டன்ட் பால் தங்கம், அரவிந்த் தங்கம் ஆகியோர் கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு குறிப்பாக புதிதாக தொழில்கள் தொடங்க உள்ள உறுப்பினர்களுக்கு ஜிஎஸ்டி எவ்வாறு எடுப் பது, கணக்குகள் எவ்வாறு தாக்கல் செய்யப்படுவது என்பது குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்கள்.

விழாவில் சங்க முன்னாள் தலைவர் ஜெயவேல் முன்னாள் பொருளாளர் பழனிச்சாமி பிஆர்ஓ ராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட என்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஆர் ராஜதுரை செயலாளர் தாமோதர சாமி பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு கள் உள்ள இந்த கட்டுமான துறையில் பொறியாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

அரசுக்கு கட்டு மானத்துறை என்றும் உறுதுணையாக இருந்து வருகிறது தமிழக அரசு இன்ஜினியர்களுக்கு கவுன் சில் அமைக்க வேண்டும் கட்டுமான பொருட்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் லோக்கல் பிளானிங் அத்தாரிட்டி அப்ரூவல் எடுப்பதை எளிமையாக வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அமைச்சர் முத்துசாமி இடம் கோரிக்கை மனு அளித்து உள்ளோம் எங் களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக் கும் என்று நம்புகிறோம்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் மணல் சப்ளை யர்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஸ்டீல் மார்ட் உரிமையாளர் சசிகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img