சிதம்பரம் அண்ணாமலை நகரில் பொதுமக்களால் பூமா கோவில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்தீமா பீபி சாஹிபா தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா(சந்தனக் கூடு) நேற்று முன் தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக தர்கா பரம்பரை டிரஸ்டி சையது ஜீலானி தலைமையில் பாத்தியா ஓதப்பட்டு அங்குள்ள சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிதம்பரம் அண்ணாமலைநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த தர்கா அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளதால் நூற்றுக்கணக்கான மாணவ-, மாணவிகளும் விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.