சென்னிமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காகவும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவும் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து பெருந்துறையில் இருந்து தனியாக சென்னிமலை பேரூராட்சிக்கு பைப்லைன் அமைத்து தர நேற்று பெருந்துறை வருகை தந்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேருவிடம் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவர் சௌந்தர்ராஜன், அமைச்சரை நேரில் சந்தித்து சென்னிமலை பேரூராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக தனி பைப்லைன் அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர்.
அதை தொடர்ந்து அமைச்சர் நேரு உடனடியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடத்தில் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு உடனடி தீர்வாக சென்னிமலைக்கு தனி குடிநீர் பைப் லைன் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.