fbpx
Homeபிற செய்திகள்விஐபிஓஎஸ் 2024 மாநாடு: புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சியை வெளிப்படுத்தியது

விஐபிஓஎஸ் 2024 மாநாடு: புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சியை வெளிப்படுத்தியது

சென்னையில் உள்ள விஎஸ் மருத்துவமனை மற்றும் விஎஸ் மருத்துவ அறக்கட்டளை இணைந்து பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை கிண்டியில் உள்ள ரமடா பிளாஸாவில் விஎஸ் சர்வதேச துல்லிய புற்று நோயியல் மா நாட்டை (விஐபிஓஎஸ் 2024) நடத்தினர்.

இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த மாநாட்டு நிகழ்வு புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் புதிய மருத்துவ நுட்பங்களை வளர்ப்பதற்காக உலகளாவிய புற்று நோயியல் நிபுணர்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த உதவும்.

மருத்துவத் துறையில் புகழ்பெற்ற நிபுணர்களால் நடத்தப்படும் இந்த மாநாடு, துல்லியமான புற்று நோயியல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய விரிவான ஆய்வுக்குக் களம் அமைக்கிறது.

விஐபிஓஎஸ் 2024 மாநாடு புற்று நோய் சிகிச்சையில் மாற்றத்தக்க முன்னேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நோய் அறிதல், பரிசோதனை, முன் கணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த கவனிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் அவசியத்தை இம்மாநாடு உணர்த்துகிறது.

இம்மாநாட்டில் 100-க்கும் அதிகமான கல்வியாளர்கள், முன்னணி மருத்துவ மையங் களைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img