சென்னை வானகரத்தில் உள்ள எஸ்வி மேல்நிலைப்பள்ளியில் 2ம் ஆண்டு விளையாட்டு தின விழா நடைபெற்றது. இதில் மாணவர்களிடையே ஒழுக்கம் மற்றும் உடல் நல ஆரோக்கியம் குறித்த உடல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறை உதவி ஆணையர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தற்போதைய சூழலில் நாம் எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருக்கும் கலாச்சாரம் நிலவுகிறது. இது நமக்கு பல்வேறு உடல்நலப் பிரச் சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.
எனவே மாணவர்கள் செல்போன் மற்றும் டிவி பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து நல்ல சூரிய ஒளிப்படும்படி வெளிப்புறங்களுக்கு வந்து விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்“ என்றார். மாணவர்களை வெளிப்புற நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்கவும், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று எஸ்வி மேல்நிலைப்பள்ளி தெரிவித்துள்ளது.