இந்தியாவின் மிகப் பெரிய சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான சேஃப் எக்ஸ்பிரஸ், அதன் அதிநவீன லாஜிஸ்டிக்ஸ் பார்க்கை தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கியுள்ளது.
மூலோபாய ரீதியாக முக்கியமாக உள்ள திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே இந்த புத்தம்புதிய நவீன வசதி அமைந்துள்ளது. இதே மப்பேடில் தான் சமீபத்தில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தை இணைப்புரீதியாக மேம்படுத்துவதற்காக, மிகப்பெரிய குறிக்கோளுடன் உள்கட்டமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சேஃப் எக்ஸ்பிரஸின் மூத்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் உள்ள மப்பேடில் உள்ள சேஃப்எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் வசதி 6.5 லட்சம் சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
டிரான்ஸ்ஷிப்மென்ட்
அதி நவீன டிரான்ஸ்ஷிப்மென்ட் மற்றும் 3PL வசதிகளுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த பகுதியில் உள்ள வணிகங்களின் அதிகரித்து வரும் சேமிப்பு மற்றும் கிடங்கு தேவைகளை வழங்கும் அதே வேளையில் விரைவான இணைப்பையும் வழங்குகிறது.
புதிய லாஜிஸ்டிக்ஸ் பார்க்கில், 200-க்கும் மேற் பட்ட வாகனங்களை ஒரே நேரத்தில் ஏற்றி இறக்கும் வசதியுள்ள கிராஸ்-தளம் உள்ளது. இங்கே தூண்கள் மாதிரி எந்த தடுப்பும் இல்லாமல் மாதிரி 80 அடிக்கு மேலே பரந்த இடம் உள்ளது.
இது வசதிக்குள் சரக்குகளை தடையின்றி நகர்த்துவதில் உதவுகிறது. அனைத்து வானிலையிலும் சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு வசதியாக, 16 அடி அகலமுள்ள காண்டிலிவர் ஷெட் வசதி உள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் வளாகத்தில் தேவையான தீயணைப்பு கருவிகள் மற்றும் அத்தகைய உடனடித் தேவைகளை சமாளிக்கும் திறனுள்ள பயிற்சி பெற்ற மனிதவளம் உள்ளது.
சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதி, அந்த முழுப் பகுதியிலும் பரவியுள்ள தொழில்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை சந்திப்பதில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.