சென்னை பிரசாந்த் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை வேளச்சேரி பிரசாந்த் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு 3 நாள்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மருத்துவமனையிலிருந்து 5 கி.மீ. தூரம் வாக்கத்தான் போட்டி நடை பெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாக்கத்தான் போட்டியை மருத் துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் பொறுப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிப்பது, கவன சிதறல்களை குறைப்பது, விபத்துகளை வெகுவாக குறைப்பது மற்றும் காயங்கள், உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை தவிர்த்தல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த பங்கேற்பாளர்கள், தன்னார்வலர்கள், பொது மக்களுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.