சென்னையில் வடபழனி ஆற்காடு சாலையில் தனது புதிய உயர்நிலை மருத்துவ வளாகத்தை காவேரி மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாக்க தலைவர் டாக்டர். எஸ் சந்திரக்குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். எஸ் மணிவண்ணன் செல்வராஜ், மற்றும் இக்குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த புதிய மருத்துவமனையில் 9 உயர் சிகிச்சை நேர்த்தி மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நான்காம் நிலை சிகிச்சை பராமரிப்பு மையமாக வடபழனி காவேரி மருத்துவமனை உயர் நிலை அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இதில் 250 படுக்கை வசதிகளைக் கொண்ட இம் மருத்துவமனையில், 75 படுக்கைகளுடன் கூடிய உயிர்காக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவு , 30 படுக்கை வசதிகளுடன் கூடிய உறுப்புமாற்று தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் உட்பட அனைத்து வசதிகளும், நவீன சாதனங்களும் இடம் பெற்றுள்ளன.
காவேரி மருத்துவமனை புதுமையான சிகிச்சை பராமரிப்பின் நம்பிக்கையளிக்கும் கலங்கரை விளக் கமாக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.