சென்னையின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவரும், தொழில் முனைவோருமான டாக்டர் சரண்யாவின் முன்னெடுப்பான மாயா யுனிவர்ஸ் சார்பில், தேசிய அளவிலான உயர்ந்த நடனப் போட்டியான ‘காட் – கிரேட்டஸ்ட் ஆஃப் டான்ஸ்’ (GOD – Greatest Of Dance), சென்னையில் வரும் டிசம்பர் 2, 3ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தியாவின் பலதரப்பட்ட கலாசார வகைகளின் கலைத்துவத்தை வெளிக்கொண்டு வரும் மாபெரும் நடன கொண்டாட்டமாய் ‘காட்’ நடனப் போட்டி அமைய உள்ளது. பலதரப்பட்ட கலாசாரங்கள், வடிவங்கள், அமைப்புகளின் தொகுப்பாக திகழும் மேற்கத்திய நடனத்தை அங்கீகரிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நடனப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 2, 3ம் தேதிகளில் சென்னையின் மதிப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இப்போட்டி நடைபெற உள்ளது. அபரிமிதமான நடன திறமைகளை ஒன்றிணைக்கவும், பல்வேறு நடன வடிவங்களை வெளிப்படுத்தவும், படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இப்போட்டி உறுதி அளிக்கிறது.
இளம் நடன கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், பெரிய அளவில் போட்டியிடவும், தன்னார்வலர்கள் பலருடன் இணைந்து தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் பெரும் வாய்ப்பாக ‘காட்’ நடனப் போட்டி வழிவகுக்கிறது.