கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரில் உள்ள புனித இரண்டாம் ஜான் பால் ஆலயத்தில் தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்த ஆலயம் ஆர்.எஸ்.புரம். புனித அருளானந்தர் ஆலயத்தின் கிளை பங்காக உள்ளது.
பங்கு தந்தை அருட்பணி பால்ராஜ், காரமடை பங்கு தந்தை அருட்பணி சிஜூ. பங்குத்தந்தை அருட்பணி. நவின் ரொசாரியோ ஆகியோர் கலந்துக் கொண்டு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினார்கள். இறுதியில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. கோவிலை சுற்றி தேர் பவனி நடைபெற்றது.
இந்த திருவிழா நிகழ்வில் ஆர்.எஸ்.புரம். புனித அருளானந்தர் ஆலய பங்கு மக்கள், கிளை பங்கான புனித இரண்டாம் ஜான் பால் ஆலய பங்கு மக்கள் உட்பட ஏராளமானனோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.புரம். புனித அருளானந்தர் ஆலய பங்குத் தந்தை அருட்பணி. பால்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.



