சிறைக் கைதிகளின் சிந்தனையைச் சீர்படுத்தவும், அவர்களது தனிமையைப் போக்கவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவும் நண்பர்கள் புத்தகங்கள் தான்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை நூலகத்திற்கு எழுத்தாளர் கனலி (எ) சுப்பு எழுதி, ஹெர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? உடைத்துப் பேசுவோம் மற்றும் அவள்..அவன்.. மேக்கப் ஆகிய இரு நூல்கள் மற்றும் அப்துல் கலாம் புத்தகம் வழங்கப்பட்டது.
சிறைத் துறை காவல் கண்காணிப்பாளர் வி.செந்தில்குமாரிடம் FAIRA தேசிய செயல் செயலாளரும், நேரு நகர் லயன்ஸ் சங்கத்தைச் சார்ந்த லயன் எஸ்.செந்தில் குமார் மற்றும் எழுத்தாளர் கனலி ஆகியோர் இணைந்து வழங்கினர்.
நிகழ்வில் இவர்களது மகள் பொறியாளர் லயன் எஸ்.எஸ்.தேஜஸ்வினி செந்தில்குமார் மற்றும் சிறைப்பள்ளி ஆசிரியர் கே.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.