இந்திய சுகாதார துறையின் பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தருணத்தைக் குறிக்கும் விதத்தில், இணை மருத்துவர்களது இந்திய சங்கத்தின் (IAPA) 21-வது வருடாந்திர மாநாடு IAPACON 2025 என்ற பெயரில் சிறப்பாக நடைபெற்றது.
இணை மருத்துவர்கள் (PA), தொழில் பணிக்கான தேசிய அங்கீகாரத்தை கொண்டாடும் நிகழ்வாக நடைபெற்ற இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான இணை மருத்துவர்கள், கல்வியாளர்கள், சுகாதார தலைவர்கள் மற்றும் கொள்கை உருவாக்குனர்கள் பங்கேற்றனர்.
30 ஆண்டுகளுக்கும் அதிகமாக அறுவை சிகிச்சைகளில் உதவுவது, தீவிர சிகிச்சைப் பிரிவுகளை நிர்வகிப்பது என பல்வேறு நடவடிக்கைகளில் இணை மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றினர்.
இந்நிலையில் இந்தியாவில் குழு அடிப்படையிலான உடல்நல சிகிச்சை பராமரிப்பிற்கு டாக்டர். கே.எம். செரியன் முன்னோடித்துவமான பங்களிப்பை போற்றி கௌரவிக்கும் விதத்தில் அவரது பிறந்த நாளான மார்ச் 8 ஐ தேசிய இணை மருத்துவர்கள் தினமாக (PA) IAPA அதிகாரப்பூர்வமாக இம்மாநாட்டில் அறிவித்திருக்கிறது.

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு இதை தொடங்கி வைத்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன், இந்திய துணை மருத்துவர்களின் இதழ் (JIPA) என்பதனை அறிமுகம் செய்து வெளியிட்டது. இது IAPACON 2025 மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது.
இந்த மாநாட்டில் 2026–27-ல் செயல்படுத்தப்படவுள்ள புதிய தேசிய இணை மருத்துவர்களுக்கான பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதை குறித்ததாக இருந்தன.
இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டபடி, “மருத்துவரது உதவியாளர்” என்பதிலிருந்து “இணை மருத்துவர்” எனப் பெயர் மாற்றப்பட்டது ஒரு வெறும் பதவி மாற்றத்தை விட மேலானது. இது மருத்துவப் பயிற்சியில் அவர்களின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தையும், சுயாதீனத்தையும் பிரதிபலிக்கிறது.
இது குறித்து IAPA-வின் தலைவரும், NCAHP-இன் குழு உறுப்பினருமான கோமதி சுந்தர் பேசுகையில், “IAPACON 2025 மாநாட்டின் வெற்றியானது, திறமையான, புரிந்துணர்வுள்ள குழுவாக ஒருங்கிணைந்து செயல்படும் நிபுணர்கள் மூலம் இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதே IAPA-வின் தற்போதைய செயல்திட்டம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.



