டயர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான சியட், உயரிய செயல்திறன் கொண்ட அனைத்து நிலப்பரப்புகளுக்கும் உகந்த இந்தியாவின் SUV வாகனங்களுக்கான அதன்கிராஸ் ட்ரைவ் டயரை அறிமுகப்படுத்தியது.
அனைத்து நிலப்பரப்புக்களிலும்சிறப்பாக தகவ மைத்துக் கொள்ள உதவும் வகையில் இதில் சியட் (CEAT) இன் அதிநவீன 3D சைப் தொழில்நுட்பம் மற்றும் வலிமை மிகுந்த தோள் பட்டை கோண வடிவமைப்பு ஆகியவற்றை கிராஸ் ட்ரைவ் டயர் கொண்டுள்ளது.
டயரில் அடங்கியுள்ள புதிய கார்பன் பிளாக் டிரெட் கூட்டுப் பொருட்கள் சிறப்பாக பற்றிக் கொள்ளும் திறன், அத்துடன் மேம்பட்ட எரிபொருள் சேமிப்புச் செயல்திறனை வழங்குகின்றன.
கிராஸ் டிரைவ் டயர்கள்
கிராஸ் டிரைவ் டயர்கள் அனைத்து 4X2 மற்றும் 4X4 வகை SUVக்களிலும் பயன்படுத்தப்படுவதற்காக குறிப்பி டத்தகுந்த வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது.
கிராஸ் டிரைவ் டயர்கள் சியட் இன் பிரத்தியேக விற்பனை நிலையங்கள் சியட் ஷா மற்றும் டயர் ஸ்டாப் உட்பட அனைத்து முன்னணி டயர் விற்பனை நிலையங்களிலும் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது;
சியட் நிறுவனம் ஏற்கனவே மஹிந்திரா போன்ற OEMகளுடன் கூட்டுசேர்ந்து அவர்களின் சிறப்புத் தயாரிப்பான தார் போன்ற அனைத்து நிலப்பரப்புகளுக்குமான வாகனங்களுக்கும் கிராஸ் ட்ரைவை வழங்கத் தொடங்கியுள்ளது.
கிராஸ் டிரைவ் டயர்களை அதிவிரைவில் உலக சந்தையிலும் அறிமுகப்படுத்தசியட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த சியட் டயர்ஸ் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி அர்னாப் பானர்ஜி, “கிராஸ் ட்ரைவ்டயர்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்பு, வாகனத்தின் எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும்.
அதே வேளையில், சவாலான மற்றும் வெவ்வேறு மாறுபட்ட நிலப்பரப்புகளின் ஊடே பாதுகாப்போடு ஒரு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளவும் எங்கள் நுகர்வோருக்கு உதவிபுரியும். ‘உங்களை புதிதாக கண்டறியுங்கள்’ என்பதே SUV நுகர்வோருக்கான சியட் கிராஸ் ட்ரைவ் இன் முக்கிய வாக்குறுதியாகவிளங்குகிறது, என்றார்.