சிபிஎஸ்சி கிரேடு 12 மற்றும் கிரேடு பத்தாம் வகுப்பு தேர்வில் கோவை கேம்போர்டு பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. இதில் கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்இ 12 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் இந்தத் தேர்வை எழுதிய மொத்தம் 66 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 100 சதவீத (சென்டம்) தேர்ச்சி ஆகும்.
இதில் 29 மாணவர்கள் 90%க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 24 மாணவர்கள் 80%க்கு மேல் பெற்றுள்ளனர். 13 மாணவர்கள் 70%க்கு மேல் பெற்றுள்ளனர்
கோகுல் ராதாகிருஷ்ணன் 487/500, பிரணதி. எஸ்.ஆர். 486/500, மேகா லூனியா.எஸ் 484/500 மதிப்பெண்களுடன் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
மேலும் கோகுல் ராதாகிருஷ்ணன்- (உயிரியல்), மேகா லூனியா (அரசியல் அறிவியல்), விஷ்வா -(உளவியல்), மேகா லூனியா (நிலவியல்), நோரா மேத்யூஸ் (வணிக கலைகள்), தீரன் சங்கரன் (கணினி அறிவியல்), எஸ்.சாதனா ( கணினி அறிவியல்) ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளனர்.
பாடவாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் பட்டியல்:
தியாஸ்ரீ – வணிக ஆய்வுகள் (99), ருஷ்மிக் – கணக்கியல் (99), கோகுல் ராதாகிருஷ்ணன் – வேதியியல (99), பிரணதி- கணிதம் (98), விஷ்ணுப்ரியா.எஸ்.எஸ் – கணிதம் (98), அனன்யா.எச் – ஆங்கிலம் (99), பிரணதி எஸ்.ஆர் – இயற்பியல் (97), கோகுல்ராதாகிருஷ்ணன் – இயற்பியல் (97), தியாஸ்ரீ – பொருளியல் (95), அனன்யா.எச் – பொருளியல் (95), நோரா மேத்யூஸ் – பொருளியல் (95), மனிஷா புச்சா – பொருளியல் (95), மனிஷா புச்சா – தகவல் நடைமுறைகள் (99).
இதேபோல சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதிலும் கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் தேர்வை எழுதிய 84 மாணவர்களும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் 19 மாணவர்கள் 90%க்கு மேலும் 28 மாணவர்கள் 80%க்கு மேலும் 24 மாணவர்கள் 70%க்கு மேலும் 13 மாணவர்கள் 60%க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளனர்.
மேலும் கேம்போர்டு பள்ளியில் பிரணிகா.பி (486/500), விகாசினி.எம் (483/500), ரோஷினி.ஆர் (483/500), ரிதன்யா.எஸ் (- 483/500), ரிதன்யா எஸ்.எஸ். (475/500) ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்றும் கணிதத்தில் சந்திரசேகரன் பாலாஜி, பிரணிகா.பி, தமிழில் ரிதன்யா.எஸ் ஆகியோர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.
மேலும் பாட வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பெற்ற மதிப்பெண்கள்): பிரணிகா.பி – ஆங்கிலம் (98), ரோஷினி.ஆர் – ஆங்கிலம் (98), சாச்சி கோல்ச்சா – ஹிந்தி (98), சுஜய்.எஸ் -பிரெஞ்சு (97), அஸ்மிதா.எம் – அறிவியல் (98), ஹர்ஷதா அருளானந்த் -அறிவியல் (98), ரிதன்யா.எஸ் – அறிவியல் (98), ரோஷினி.ஆர் – அறிவியல் (98), ஹரிஷ் ராகவ்.கே – சமூக அறிவியல் (99), ஸ்ரீஜித்.கே – சமூக அறிவியல் (99), ரோஷினி.ஆர் – செயற்கை நுண்ணறிவு (99).
சாதனை மாணவர்கள், மாணவிகள் அனைவரையும் பள்ளியின் சேர்மன் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள்ரமேஷ், முதல்வர் பூனம் சாயல், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.