சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு அகில இந்திய பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சர்வேஷ் 496/500 மதிப்பெண் பெற்று கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவு, சமூக அறிவியல் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். தன்யா 491/500 மதிப்பெண், தமிழ், அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்களில் 100/100 மதிப்பெண்ணும், கவின்கிஷோர் 491/500 மதிப்பெண்ணும், செல்ஷியா கேத்ரின் 490/500 மதிப்பெண் மற்றும் தமிழில் 100/100 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மேலும் 480 மதிப்பெ ண்களுக்கு மேல் 11 மாண வர்களும், 450 மதிப்பெ ண்களுக்கு மேல் 50 மாண வர்களும் பெற்றுள்ளனர் . 10ஆம் வகுப்பில் பள்ளியின் சராசரி மதிப்பெண் 403.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முத்துப்பழனியப்பன் 486/500 பெற்று அறிவியல் பாடப்பிரிவில் கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். கோபிகா 485/500 மதிப்பெண் பெற்று அறிவியல் பாடப்பிரிவில் கரூர் மாவட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கலை பாடப்பிரிவில் ஹர்ஷினி 486/500 மதிப்பெண் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். அபிநிவேதா 483/500 மதிப்பெண்ணும், ஜெயப்பிரகாஷ் & மயிலேஷ்வரன் 482/500 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். மேலும் 480 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 40 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
12ஆம் வகுப்பில் பள்ளியின் சராசரி மதிப்பெண் 404. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்திலேயே சேர்வ தற்கான இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் 23 மாணவர்கள் பெற்றுள் ளனர். ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் 6 மாணவர்கள் 90 பெர்சண்டைல்க்கு மேல் பெற்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (NIT) சேர தகுதி பெற்றுள்ளனர். பரணி வித்யாலயா பள்ளி, குரோத் அகாடமி போட்டித் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ தேர்வுக்கான சிறப்பு பயிற்சியினை பள்ளியிலேயே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொன் னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப் பட்டனர்.