fbpx
Homeபிற செய்திகள்புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்- 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

புற்றுநோய் விழிப்புணர்வு வாக்கத்தான்- 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ மாணவிகள் பதா கைகள் ஏந்தியபடி நடந்து சென்றனர்.

உலகளவில் புற்றுநோ யால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின் றனர். குறிப்பாக பல்வேறு விதமாக ஏற்படும் புற்று நோய் மக்களிடையே தகுந்த விழிப்புணர்வு இல் லாமல் இருக்கிறது.

இதனிடைய இந்த புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை வி.ஜி .மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாநகர காவல் துணை ஆணையர் சந்திஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து செவிலியர் மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புற்று நோய்க்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தியபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img