fbpx
Homeபிற செய்திகள்சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி: கோவையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி: கோவையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் கோவை காந்திபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றி கோஷம் எழுப்பி கொண்டாடினர்.

இந்திய நாட்டின் குடியரசுத்துணை தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் 452 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

அனைத்து தரப்பு மக்களுக்குமான தலைவராக இருந்து வந்த சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைத்து மக்களும் கட்சி பாகுபாடு இன்றி சி பி ஆர் அவர்களுடைய வெற்றியை மகிழ்வுடன் கொண்டாடுவதாக தெரிவித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார், தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் சி பி ஆர் இன் வெற்றியை கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர். மேலும் காந்திபுரம் பகுதியில் குழுமி இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img