fbpx
Homeபிற செய்திகள்பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியாவின் டுரான்ஸா 6ஐ என்னும் கார்களுக்கான பிரீமியம் டயர் அறிமுகம்

பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியாவின் டுரான்ஸா 6ஐ என்னும் கார்களுக்கான பிரீமியம் டயர் அறிமுகம்

பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம் அனைத்து வகையான கார்களுக்குப் பொருந்தும்
வகையிலான பிரிட்ஜ்ஸ்டோன் டுரான்ஸியா 6ஐ என்ற பெயரிலான டயரை அறிமுகம் செய்துள்ளது. இது கார்களுக்கான ரேடியல் டயர் அறிமுகம் மூலம் தனது விற்பனை சந்தையை விரிவுப்படுத்தியுள்ளது.

இந்திய சாலைகளுக்கென பிரத்யேகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சொகுசான பயணத்தையும், மேம்பட்ட ஓட்டும் அனுபவத்தையும் இது அளிக்கும். எரிபொருள் சிக்கனம் மற்றும் நீடித்து உழைக்கும் வகையில் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தால் பிரீமியம் தயாரிப்பாக இது அறிமுகமாகியுள்ளது.

இந்த டயர்கள், 14 அங்குலம் முதல் 20 அங்குலம் வரையிலான – 36 ஸ்டாக் கீப்பிங் யூனிட்ஸ் (Stock Keeping Units – SKU) அளவுகளில் கிடைக்கும். பிரீமியம் வாகனங்களான எஸ்யுவி, செடான், ஹாட்ச்பேக் மற்றும் சியுவிக்களுக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரீமியம் டயர் அறிமுகம் மூலம், அரசின் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) முன்னெடுப்பில் தங்கள் நிறுவனத்துக்குள்ள பொறுப்புணர்வை பிரிட்ஜ்ஸ்டோன் நிறைவேற்றியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img