கோவை மாவட்டம், மேட் டுப்பாளையத்தில் தமிழக அரசு அறிவித்த “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நேற்று காலை 9 மணி முதல் மாவட்ட ஆட் சியர் கிராந்திகுமார் பாடி மேட்டுப்பாளையம் தாலூக் காவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதி களுக்கு நேரில் ஆய்வு செய்தார்.
மேட்டுப்பாளையம் காவல்நிலையம், உணவு பொருள் வாணிப கழகம், அரசு மருத்துவமனை, கால் நடை மருத்துவமனை, ரேஷன் கடைகள் என பல இடங்களுக்கு அதிகா ரிகளுடன் சென்று ஆய்வு நடத்தியதோடு மேட் டுப்பாளையம் நகராட்சி அலு வலகத்தில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார்.
நேற்றிரவு 9 மணியளவில் ஆய்வு பணிகளை முடித்து விட்டு மேட்டுப்பாளையத்திலேயே தங்கிய ஆட்சியர் இன்று காலை 6 மணி முதல் மீண்டும் அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் அமைந்துள்ள அரசு வள்ளுவர் துவக்க பள்ளியில் காலை மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆட்சியர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி,
நகராட்சி ஆணையாளர் அமுதா, நகர மன்ற உறுப்பினர் உமா, மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.