fbpx
Homeபிற செய்திகள்மோடிக்கு கைகொடுக்குமா பாஜக தேர்தல் அறிக்கை?

மோடிக்கு கைகொடுக்குமா பாஜக தேர்தல் அறிக்கை?

அண்மையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இது மக்களுக்கு நேரடி பலன் தரும் திட்டமாக இருந்ததால் நாடு முழுவதும் வர வேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க நேற்று தனது தேர்தல் அறிக் கையை வளர்ந்த இந்தியா என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும். பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு தரும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். ஊழல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும், உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் நிறுவப்படும்.

இவ்வாறாக பல வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஆனால் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?” என விமர்சித்துள்ளார். அதேபோல், சிவ சேனா (உத்தவ் பிரிவு) “1 மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களால் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. இது பாஜகவின் ‘தேர்தல் அறிக்கை’ அல்ல, ‘ஜூம்லா அறிக்கை” என்று விமர்சித்துள்ளது.

தெலங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட் டுள்ள சமூக வலைதள பதிவில், ”பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை.” என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தேர்தல் அறிக்கை தகர டப்பா உருட்டல் சப்தம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியா கும் போது எதிர்தரப்பினர் கடுமையான விமர்சனங் களை முன்வைப்பது வாடிக்கையான ஒன்று தான். தற்போது பாஜக தேர்தல் அறிக்கை மீதான விமர்சனங்களால் பிரசாரத்தில் அனல் பறக்கிறது,

நாட்டின் வளர்ச்சி மற்றும் பொதுவான திட்டங்கள் குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற ஏற்கனவே எதிர்ப்புகள் இருந்தும் அவற்றை தனது தேர்தல் அறிக்கையில் பாஜக சேர்த்து உள்ளது. முக்கியமாக மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையிலான சலுகை திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லாததால் பாஜக தேர்தல் அறிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது, பாஜக தேர்தல் அறிக்கையை விட இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை, வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் மோடியே பிரதமராக அமருவார் என்று பா.ஜ.க.வினர் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் அந்தக்கனவு தகர்க்கப்படும் என்று பதிலடி கொடுத்து இந்தியா கூட்டணி களம் காண்கிறது.
இரு அணிகளுமே எளிதில் வெற்றிக் கனியைப் பறித்து சுவைத்து விட முடியாது என்ற நிலையைத் தான் தற்போதைய தேர்தல் களத்தில் காண முடிகிறது.
சரியான போட்டி வெற்றி யாருக்கு?

படிக்க வேண்டும்

spot_img