fbpx
Homeபிற செய்திகள்பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் பட்டிமன்றத்துடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் பட்டிமன்றத்துடன் பொங்கல் விழா கொண்டாட்டம்

கோவை பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி பல்நோக்கு அரங்கத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ‘மகிழ்ச்சி அளிப்பது நகர வாழ்க்கையா-? கிராம வாழ்க்கையா?’ என்ற தலைப்பில் தமிழர் திருநாள் பட்டிமன்றம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் நடுவராக இருந்து சிவோகா மனித வள மேம் பாட்டு நிறுவ னத்தின் தலைவர் டி.லட்சுமி காந்தன் பட்டிமன்றத்தை நடத்தினார்.

இதில் மாணவ ஆசிரியர் வி.ஜி.ரோஷன், மாணவ ஆசிரியைகள் பி.நிலாபர் நிஷா, ஷஹானாஸ் ஆயிஷா, பி.தங்கமணி, டி.சுபாஷினி மற்றும் ஏ.ஜனனி ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ச்சி அளிப்பது நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா? என்ற தலைப்பில் பேசினர்.

அதே போல் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில் தமிழர் திருநாள் விழா நேற்று (12ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் த.மார்கரெட் மாலதி வரவேற்புரையாற்றினார்.

கல்லூரி செயலாளர் முனைவர் டி.ராஜன் தலைமையுரையாற்றினார், தமிழ் இலக்கிய கருத்துக்களம் பேச்சுப்பட்டறை தலைவர் ஜே.ஸ்ரீராம் ஆதித்தன் சிறப்புரை வழங்கி விழாவை சிறப்பித்தார். இறுதியில் முதல்வர் முனைவர் ம.கெத்சி நன்றியுரையாற்றினார்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாணவிகள் வண்ணகோலமிட்டு இருந்தது அனைவரையும் கவர்வதாக இருந்தது.

படிக்க வேண்டும்

spot_img