fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் 135 நபர்களுக்கு ரூ.9.38 கோடி மானியத்துடன் கடனுதவி முதல்வருக்கு பயனாளிகள்...

கோவை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் 135 நபர்களுக்கு ரூ.9.38 கோடி மானியத்துடன் கடனுதவி முதல்வருக்கு பயனாளிகள் நன்றி

கோவை மாவட்டம் தாட்கோ மூலமாக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார முன்னேற்ற திட்டத்தின் கீழ் தாட்கோ வழியே பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. 35 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் தாட்கோ வழியே சிவி-கிஸிமிஷிணி திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு 2024- &2025 ஆம் ஆண்டு 79 நபர்களுக்கு ரூ.5.46 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவியும், 2025-2026 ஆம் ஆண்டு 56 நபர்களுக்கு ரூ.3.92 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி என கடந்த இரண்டு ஆண்டுகளில் 135 நபர்களுக்கு ரூ.9.38 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம், பயனியர் ஆட்டோ, மாடு ஆடு பண்ணை, கான்கிரீட் கலவை இயந்திரம், செங்கல் தயாரிக்கும் இயந்திரம், துணிக் கடை, மளிகை கடை, உணவகம், டிஜிடல் ஸ்டூடியோ மற்றும் கணினி மையம் போன்ற தொழில்கள் செய்து தொழில்முனைவோராக பயனடைந்துள்ளார்கள்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுதிட்டத்தின் கீழ் வெள்ளக்கிணறு பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பவருக்கு தாட்கோ மூலம் ரூ.3.50 லட்சம் மானியத்துடன், ரூ.10,59,760 வங்கி கடனுடன் சேர்த்து ரூ.14,09,760 மதிப்பில் சுற்றுலா வாகனம் வாங்கிட மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுதிட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளியான அருண்குமார் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:
நான் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் வசித்து வருகிறேன். தற்போது வரை வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் சொந்தமாக வாகனம் வாங்கி ஓட்டுவதற்கு எனக்கு ஆசை இருந்தது. ஆனால் அதற்கான பொருளாதார வசதி என்னிடமில்லை.
இந்நிலையில், தாட்கோ துறையின் மூலம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம் வாங்க மானியத்துடன் கடன் உதவிபெற விண்ணப்பித்தேன்.

அதனைத் தொடர்ந்து, என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தாட்கோ துறையின் மூலம் எனக்கு ரூ.3.50 லட்சம் மானியத்துடன், ரூ.10,59,760 மதிப்பில் வங்கி கடனுடன் சேர்த்து ரூ.14,09,760 மதிப்பில் சுற்றுலா வாகனம் வாங்கிட மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு மானிய தொகை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய வருமானம் உயர்ந்துள்ளது. மேலும், வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நான் இன்று ஒரு வாகனத்தின் உரிமையாளராக இருக்கிறேன்.
என்னுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய இது போன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை நிறைந்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img