fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மகளிர் தின விழா: 6500 பெண்களுக்கு ரூ.188 கோடி கடன் வழங்கிய பேங்க் ஆப்...

கோவையில் மகளிர் தின விழா: 6500 பெண்களுக்கு ரூ.188 கோடி கடன் வழங்கிய பேங்க் ஆப் இந்தியா

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பேங்க் ஆப் இந்தியா கோயமுத்தூர் மண்டலம் சார்பாக 6500க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களில் கடன் உதவி வழங்கப்பட்டது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 5500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட சிறந்த பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆப் இந்தியா செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பேங்க் ஆப் இந்தியா கோயமுத்தூர் மண்டலம் சார்பாக பெண் வாடிக்கையாளர்களை கவுரவிக்கும் விழா கோவை பாரதியார் பல்கலை கழக வளாக அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பேங்க் ஆப் இந்தியா வங்கியின், பொது மேலாளர் முகேஷ் சர்மா, (ழிஙிநி தெற்கு, சென்னை) பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கவுன்சில் தலைவர் லவ்லினா லிட்டில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் அசோகன், பேங்க் ஆப் இந்தியா கோயம்புத்தூர் மண்டல மேலாளர் அஜெயா தாக்கூர் மற்றும் முக்கிய பிர முகர்கள் கலந்து கொண் டனர்.

இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் கலந்து கொண்ட னர்.
இதில் ரூ.50 கோடிக்கு மேலான விவசாயக் கடன்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப் பட்டன. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் சில் லறை வணிகக் கடனாக ரூ.130 கோடி வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவில் பேசிய, கோயம்புத்தூர் மண்டல மேலாளர் அஜெயா தாக்கூர், எங்களது வங்கி பெண் வாடிக் கையாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். 188 கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்களில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றி பேசிய பேங்க் ஆப் இந்தியா வங்கியின், பொது மேலாளர் முகேஷ் சர்மா, பெண்கள் எல்லா துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு எங்களது வங்கி பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கடன் உதவி திட்டங்களை வழங்குவதாக கூறினார்.

வங்கியை தேடி வாடிக்கையாளர்கள் வந்த காலம் போய் தற்போது வங்கி உங்களை தேடி வந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விரிவாக கூறிய பொதுமேலாளர் முகேஷ் சர்மா வங்கியின் திட்டங்களை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார்.

இதில் சிறப்புரையாற்றிய பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கவுன்சில் தலைவர் லவ்லினா லிட்டில், வங்கி சேவைகளை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக பெண் உரிமைகள் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்பு பேசிய பாரதியார் பெயர் கொண்ட இந்த பல்கலைகழகத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது அனைவருக்கும் பெருமை எனவும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேங்க் ஆப் இந்தியா முதன்மை மேலாளர்கள், மேலாளர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பேங்க் ஆப் இந்தியா வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒப்பணக்கார வீதியில் உள்ள கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டு சானிட்டரி நாப்கின் டிஸ்பென்சர் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் கோவையில் உள்ள பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img