கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, காணியாளம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, காணியாளம்பட்டி கடைவீதியில் கல்லூரி முதல்வர் லோகநாதன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாயனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சடையன், உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மோகன்ராஜ், செல்வராஜ், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற இந்த பேரணியில், தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் செல்லாதே, மிதவேகம் மிக நன்று உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.