தஞ்சாவூரில் நாடாளுமன்றத் தேர்த லில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது, வாக்கை வீணாக்காமல் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இப்பேர ணியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கோட்டாட்சியர் இலக்கியா, மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, புட்பால் உலக சாதனையாளர் குமரவேல் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இடூடபில்யூ ஸ்டடி நிறுவனத்தின் இயக்குநர் வைர பாலா தியாகராஜன் முன்னிலை வகித்தனர். மேரிஸ் கார்னர் தொடங்கி இரயிலடி வழியாக ஆத்துப்பாலம் காந்திஜி வணிக வளாகம் அருகில் வந்து நிறைவடைந்தது. இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றனர்.