பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் (அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை) கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, வங்கியின் கோவை வட்ட அலுவலகம் சார்பில் இன்று (புதன்கிழமை) பொது வாழ்வில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி, ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதனை வங்கியின் வட்டத் தலைவர் மீரா பாய் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.



