விமர்ஷ் 5ஜி ஹேக்கத்தான் என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, டெலிகாம் சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் இந்தியா, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம், மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான ஒரு போட்டி ஆகும். கொங்கு மாணவர்கள் அணி உருவாக்கிய “டேப் – ட்ராபிக் ஏஐ பட்டி” உருவாக்கிய மாடல் ரன்னர்-அப் விருதை பெற்றது. குழு சார்பாக, குழுவின் வழிகாட்டி, ஈசிஈ துறையின் உதவிப் பேராசிரியர் திரு. ஆர்.பி.கார்த்திக் விருது மற்றும் சான்றிதழ்களை மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லாவிடம் இருந்து பெற்றார். கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் முனைவர்.வீ.பாலுசாமி ஆகியோர் பரிசு வென்றோரை பாராட்டினர்.