தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பங்காரு வரவேற்றுப்பேசினார்.
இந்நிகழ்ச்சியில் 2019 – 2020 ஆம் கல்வியாண்டில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு, கணிதம் உள்ளிட்ட 19 துறைகளை சேர்ந்த, 530 மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சங்கத் தலை வர்கள் வீரமணி, புதூர் சுப்பிரமணி, சர்க்கரை ஆலை இயக்குநர் மாது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார், ரவிச்சந்திரன், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.