கோவை அஞ்சலக கோட்டம் மற்றும்ஆர் எம் எஸ் கோட்டம் சார்பில் மண்டல அளவில் சிறப்பாக பணிபுரிந்த அஞ்சலக ஊழியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கவுண்டம்பாளையம் மின் வணிக பார்சல் முன்பதிவு மையத்தில் நடைபெற்றது.
விழாவில் கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் கோவை ஆர் எம் எஸ் கோட்ட கண்காணிப்பாளர்ஜெயராஜ் பாபு ஆகியோர் தலைமை தாங்கி கோட்டளவில் பல்வேறு துறைகளில்சிறப்பாக பணிபுரிந்தஊழியர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்கள் விழாவில் 250க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன
இந்த விழாவில் கோவை மண்டல உதவி இயக்குனர் காசி விசுவநாதன் தபால் தகவல் தொழில்நுட்ப பிரிவு உதவி இயக்குனர் கமலேஷ் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபுமுதுநிலை அஞ்சலக அதிகாரி உமா மகேஸ்வரன் மற்றும் ஆர் எம் எஸ் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்