கோவை அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில், குருதக்ஷா 2025- 2026 திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. துணை வேந்தர் டாக்டர் வி.பாரதி ஹரிஷங்கர் தலைமை தாங்கி உரையாற்றினார். மாணவர்களுடனான தன்னிகரற்ற ஈடுபாடும், கற்பித்தலில் உள்ள புதுமைகளும், மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ஆசானும் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். தவறுகளை ஏற்றுக் கொள்வதும், எதிர்மறைகளை தவிர்ப்பதும், மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுவதும், ஆசான்களின் முழுமையான வளர்ச்சிக்கு அவ சியமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குருதக்ஷா 2025- 2026 திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.விஜயலட்சுமி, வரவேற்புரை வழங்கினார். பின்னர், திட்டத்தின் ஒழுங்கமைப்பாளர் டாக்டர் எஸ்.காயத்ரி தேவி, திட்டத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் பலன்கள் குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சி இறுதியாக, குருதக்ஷா 2025-2026 திட்ட ஒருங்கிணைப்பாளர், டாக்டர் யு.ஜெரினாபி அனைவருக்கும் நன்றி கூறினார். ஏழு நாட்கள் நடைபெறவிருக்கும் குருதக்ஷா திட்டம், புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் வல்லு மைகளை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



