அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் மகளிரியல் கல்வி மையம் மற்றும் மனையியல் விரிவாக்கத் துறை இணைந்து நடத்திய பன்னாட்டு மகளிர் தினம் விழா நேற்று திருச்சிற்றம்பலம் கலை அரங்கத்தில் தொடங்கியது.
இதில் இந்த உயர்கல்வி நிறுவனத்தின் மனையியல் புல முதன்மையர் முனைவர் எஸ்.அம்சமணி வர வேற்புரை வழங்கினார். துணை வேந்தர் வை.பாரதி ஹரிசங்கர் தலைமை உரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட பெண் சாதனையாளர்களான ஷோபனா சண்முகம், ஆஷாராவ், கீதாராஜ், அஜித்தா பேகம் ஆகியோருக்கு பெண் சாதனையாளர் விருதினை வழங்கினார்.
பின்னர் கோயம்புத்தூர் கருவுறுதல் மற்றும் Obgyn ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஆஷாராவ் பெண்களின் சுதந்திரம் குறித்து பேசினார்.
தொடர்ந்து அடுத் தடுத்து சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (MDRF) துறைத் தலைவர் விஞ்ஞானி ஷோபனா சண்முகம், கோயம்புத்தூர் சிவேஷ் ஆட்டிஸம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கீதாராஜ், திருவனந்தபுரம் காவல்துறை துணைத் தலைவர் அஜித்தா பேகம், காரமடை கம்மரம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் நிர்மலா பொன்னுசாமி,
கல்வி நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் துறை, உதவி பேராசிரியர் சுபாஷினி, பதிவாளர் கௌசல்யா உள் ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.