fbpx
Homeபிற செய்திகள்உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஹெச்பிசி சர்வர் ‘ருத்ரா’சி-டிஏசி-யுடன் அவலான் டெக்னாலஜிஸ் ஒப்பந்தம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஹெச்பிசி சர்வர் ‘ருத்ரா’சி-டிஏசி-யுடன் அவலான் டெக்னாலஜிஸ் ஒப்பந்தம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஹெச்பிசி சர்வர் ‘ருத்ரா’-வை வடிவமைக்கும் பணியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பான சி-டிஏசி–உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் மின்னணுவியல் உற்பத்தி சேவைகள் தொழில் துறையில் முன்னணி நிறுவனமாக அவலான் டெக்னாலஜிஸ் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பான சி-டிஏசி–ன் உற்பத்தி செயல்பாட்டுக்கான ஒரு முக்கிய பங்குதாரராக ஆகியிருக்கிறது. இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து தயாரிப்பதை குறிக்கோளாக கொண்டிருக்கும் ‘ருத்ரா’ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக உயர் செயல்திறன்மிக்க கம்ப்யூட்டிங் – கணினி (ஹெச்பிசி) அமைப்புகளை உள்நாட்டிலேயே சொந்தமாக தயாரிக்கும் திறனை இது சிறப்பாக மேம்படுத்தும். இது குறித்து அவலான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. குன்கமெத் பிச்சா கூறுகையில், ”ருத்ரா ஹெச்பிசி சர்வர் தயாரிப்பில் உதவுகிற ஒரு முக்கிய பார்ட்னராக செயல்படப் போகிறோம். மேம்பட்ட உற்பத்தி தீர்வுகளை வழங்குவதன் மூலம் ருத்ரா சர்வர் உருவாக்க செயல்முறையில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது இந்தியாவிலேயே இதனை உருவாக்குகின்ற சாதனையை நிகழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்” என்றார். சி-டிஏசி–ன் தலைமை இயக்குநர் மகேஷ் கூறுகையில், ”ருத்ரா சர்வர் போட்டியிடும் திறனை விரிவாக்கும் பணியில், அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்து, நமது தேசத்தின் தொழில்நுட்ப சுய சார்புக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க உள்ளது. இதன்மூலம் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு நாங்கள் பாதை அமைக்கிறோம்” என்றார்.

ReplyForwardAdd reaction

படிக்க வேண்டும்

spot_img