fbpx
Homeபிற செய்திகள்காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏடிஜிபி அருண் கலந்து கொண்டு குடும்பத்துடன் ரேக்ளா வண்டியில்...

காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏடிஜிபி அருண் கலந்து கொண்டு குடும்பத்துடன் ரேக்ளா வண்டியில் பயணம்

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏடிஜிபி அருண் கலந்து கொண்டதோடு குடும்பத்துடன் ரேக்ளா வாகனத்தில் பயணித்து மகிழ்ந்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதில் ஏ டி ஜி பி அருண் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் ரேக்ளா வாகனத்தில் தனது குடும்பத்துடன் பயணித்தும் மகிழ்ந்தார்.

தொடர்ந்து காவலர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img