தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தமிழ் ஐயா வெளியீட்டகம் சார்பில் வெளியாக கலைஞர் தமிழ் 100 நூல்கள் அறிமுக விழா ஔவை கோட்ட வளாகத்தில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் டாக்டர் நரேந்திரன் தலைமை வகித்தார், புலவர் கந்தசாமி, முனைவர் குப்புவீரமணி.ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் முனைவர் விஜி சந்தோசம் நூல்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். உலக தமிழ் சங்க தலைவர் விஜி சந்தோஷத்திற்கு கலைஞர் தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டது. இதில் டாக்டர் செல்வம், ரவீந்திரன், நல்லாசிரியர் சம்பத்குமார், செல்வராசு, சுரேஷ்குமார், கண்ணகிகலைவேந்தன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை முனைவர் கலைவேந்தன் தொகுத்து வழங்கினார் இதற்கான அனைத்து ஏற்பாடுகளை ஔவை கோட்ட அறிஞர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.