fbpx
Homeபிற செய்திகள்எபிக் குழும தொழிற்சாலைக்கு பசுமை டிஎம்டி கம்பிகள் வழங்க ஏஆர்எஸ் ஸ்டீல் முடிவு

எபிக் குழும தொழிற்சாலைக்கு பசுமை டிஎம்டி கம்பிகள் வழங்க ஏஆர்எஸ் ஸ்டீல் முடிவு

எபிக் குழும தொழிற்சாலைக்கு பசுமை டிஎம்டி கம்பிகள் வழங்க ஏஆர்எஸ் ஸ்டீல் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து கூறியுள்ளதாவது: எபிக் குழுமம், இந்தியாவில் ஆடைகள் உற்பத்திக்கான பசுமை தொழிற்சாலையை நிறுவ 377 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. மின்சார பயன்பாடு மற்றும் தண்ணீர் பயன்பாட்டில் 100 சதவீதம் கழிவு வெளியேற்றம் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட உள்ள இந்த தொழிற்சாலை, நாட்டில் தொழில்துறை நிலைத்தன்மைக்கு முன்னுதாரணமாக அமைய உள்ளது.

இந்தப் பசுமை பாதுகாப்பின் முக்கிய அங்கமாக ஏஆர்எஸ் ஸ்டீலின் மிகக் குறைந்த மாசு வெளியேற்றம் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஎம்டி கம்பிகளை எபிக் குழுமம் பயன்படுத்த உள்ளது, இது சென்ட்ரா வேர்ல்டு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஏஆர்எஸ் பசுமை டிஎம்டி கம்பிகள் மூலம், எபிக் குழுமம் தங்கள் கட்டிடத்தின் கார்பன் உமிழ்வை தோராயமாக 20 சதவீதம் குறைக்க உள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது குறித்து எபிக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ரஞ்சன் மஹ்தானி கூறுகையில், “ஏஆர்எஸ் ஸ்டீல் மற்றும் சென்ட்ரா வேர்ல்டு உடன் இணைந்து இந்த தொழிற்சாலையை நாங்கள் அமைப்பதன் மூலம், தரத்தில் சமரசம் செய்யாமல் எங்கள் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைத்துள்ளோம்” என்றார்.

சென்ட்ரா வேர்ல்டு நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் சவுத்ரி கூறுகையில், “இம்முயற்சி இந்தியாவில் நிலையான சுற்றுச்சூழலுக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக உள்ளது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img