fbpx
Homeபிற செய்திகள்கரூரில் ஆசிரியர்கள் - மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா: செந்தில்பாலாஜி பங்கேற்பு

கரூரில் ஆசிரியர்கள் – மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா: செந்தில்பாலாஜி பங்கேற்பு

கரூர் அடுத்த வெண்ணைமலை அட்லஸ் கலையரங்கில் ஆசிரியர் தின விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த இரு பால் ஆசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 2025 ஆம் ஆண்டில் கரூர் மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் மாவட்ட அளவில் சிறப்புநிலை தகுதி பெற்ற மாணாக்கர்கள் மாநில அளவில் நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மாணாக்கர் களை பங்கேற்கச் செய்த விளையாட்டு துறை ஆசிரியர்கள் என அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அனைவருக்கும் தம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊக்க பரிசு, கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img