fbpx
Homeபிற செய்திகள்தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் 

தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் 

கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பார் வையாளர்கள் நியமனம் செய்யப்பட் டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலூர் மக்களவைத் தொகுதி பொதுப் பார்வையாளர்களாக டாரப் இம்சென் (9489962645),காவல் பார்வையாளராக மனிஷ் அகர்வால் (9489962646), செலவின பார்வையாளர்களாக டபாஸ் லோத் (9489962643) (திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி),பிரமானந்த் பிரசாத் (9489962644) (பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி)

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் தேர்தல் செலவின கணக்குகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் தேர்தல் குறித்த புகார்களை பார்வையாளர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதனிடையே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை,மீடியா கண்காணிப்பு அறை ஆகியவற்றை பொது பார்வையாளர் டாரப் இம்சென் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img