இந்திய இளம் கால்பந்து வீரர்கள் வெற்றியின் உச்சத்திற்கு செல்ல அப்பல்லோ டயர்ஸ் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் அப்பல் லோ டயர்ஸ் ரோடு டு ஒல்ட் டிராஃ போர்ட் ஐவர் கால்பந்து போட்டி துவங்கப்பட்டது.
இந்த போட்டியில் 112 அணிகள் ஒருவருக்கொருவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆறு நகரங்களில் இருந்தும் ஒவ் வொரு சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டன.
சென்னையில் நடந்த பரப ரப்பான இறுதிப் போட்டியில், ஹரியானா சிட்டி எப்சி அணி அப்பல்லோ டயர்ஸ் ரோடு டு ஒல்ட் டிராஃபோர்ட் ஐவர் கால்பந்து போட்டியின் தேசிய சாம்பியன்களாக உருவெடுத்தது.
இதனால் ஹரியானா சிட்டி எஃப்சி அணி பிரிட்டனில் உள்ள, மான்செஸ்டர் நகருக்கு சென்று தி தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் என்றும் அழைக்கப்படும் பழம்பெரும் ஓல்ட் ட்ராஃ போர்ட் மைதானத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. இதற்கான செலவு முழுவதையும் அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ஏற்கிறது.