பேருர் அம்பேத்கர் கல்வி மற்றும் பயிற்சி மையம் முலம் மாணவ மாணவிகளுக்கு இலவச போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. நேற்று பயிற்சி வகுப்புகளை முன்னாள் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் காமராஜர் பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கினர்-.
இந்த நிகழ்வில் அறக்கட்டளை துணை தலைவர் எஸ்.செல்வக் குமார், பொருளாளர் பழனிசாமி, அறங்காவலர் மாறன், முன்னாள் அறக் கட்டளை தலைவர் வெள்ளிங்கிரி, ஆலோசகர் நடராஜன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.