கரூர் அருகே, எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மார்ட்டியல் ஆர்ட்ஸ் அகாடமி நடத்திய, முதலாம் ஆண்டு, மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் மாணவ-, மாணவிகள் தங்கள் திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் உள்ள வி.கே.டி. மண்டபத்தில் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மார்டியல் அகாடமி நடத்தும் முதலாம் ஆண்டு 2024 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி வெங்கமேடு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
அகாடமி இயக்குனர் அப்துல் ஹக்கிம் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். அகாடமியின் பொறுப்பாளர்கள் நாசர் அலி, அபூபக்கர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஈரோடு, நாமக்கல், கோவை, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.
கராத்தே போட்டியில் கட்டா, குமிட்டி,டி. கட்டா, கிகான் போன்ற நான்கு பிரிவுகளிலும், சிலம்பம் போட்டி இரண்டு பிரிவுகளிலும் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு, காவல் ஆய்வாளர் சரவணன் கோப்பை, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.