fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடியில் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, மாநகராட்சி பகுதியில் மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மழைநீர் எங்கேயும் தேங்காமல் வழிந்தோடும் வகையில் பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

நகரின் பிரதான மழைநீர் வடிகாலான பக்கிள் ஓடை முழுவதும் 5 மீட்டர் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகருக்குள் வரும் தண்ணீர் கடலுக்கு செல்ல முன்பு 3 வடிகால்கள் மட்டுமே இருந்தன. தற்போது 14 வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வடிகால்களும் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கினாலும் 2 முதல் 3 மணி நேரத்தில் வடிந்துவிடும்.

அதுபோல பாதாள சாக்கடை திட்டத்தின் வழியாகவும் மழைநீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 28 எம்எல்டி கழிவுநீரை வெளியேற்றும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

முகாமில் உதவி ஆணையர் பாலமுருகன், நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டு ராஜாமற்றும் கவுன்சிலர்கள் கனகராஜ் கந்தசாமி ஜான் பொண்ணப்பன் இசக்கி ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img