உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு AINU சென்னை மருத்துவமனை சார்பில் 2 வது சிறுநீரக ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
இந்தியாவின் முன்னணியில் சென்னயின் மிகப்பெரிய அளவில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜி (AINU சென்னை) மருத்துவமனை, மார்ச் 14ம் தேதி கொண் டாடப்படும் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு தனது 2வது சிறுநீரக பராமரிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.
ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி 5 கி.மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறுநீரக பராம ரிப்பிற்கான விழிப்புணர்வை வெளிப்படுத்தினர்.
இதில் மேகநாதன் ரெட்டி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் சிரதீப் தத்தா, சிஓஓ ஏஜி-பி பிரதம் மற்றும் AINU மருத்துவமனையின் மூத்த நிர்வாகப் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை நடிகர் சந்தோஷ் பிரதாப் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் பொது மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.