கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இன்று ஆனைகட்டி பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது, அங்குள்ள ஒரு சாப்பாட்டு கடையில் வெங்காய தோசை சுட்டு, சாப்பிட வந்தவர்களுக்கு வழங்கி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பொதுமக்களிடம் அவர் பேசும்போது, ஆனைகட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள மலைகிராமங்களுக்கு சாலை வசதி, மின்சார வசதி தொய்வின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த பரப்புரையின் போது, பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.



